உலகம்

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்ற பெண்

செய்திப்பிரிவு

மேற்கு அமெரிக்க நாடான மாலியில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.

இதுகுறித்து மாலி சுகாதாரத் துறை தரப்பில், “ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பிரசவித்திருப்பது இதுவே முதல் முறை. 25 வயதான ஹலிமா சிசே என்ற பெண் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். 9 குழந்தைகளில் 5 பெண் குழந்தைகளும், நான்கு ஆண் குழந்தைகளும் அடங்குவர். தாய் மற்றும் குழந்தைகள் நலமாக உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் கூறும்போது, ''அப்பெண்ணுக்கு 7 குழந்தைகள் பிறக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவருக்கு 9 குழந்தைகள் பிறந்துள்ளன. மாலியின் மருத்துவக் கட்டமைப்பு, இதுபோன்ற பெரிய அளவிலான பிரசவங்களைப் பார்ப்பதற்கு உகந்ததாக இருக்காது என்பதால் அப்பெண் மொராக்கோவுக்கு அனுப்பப்பட்டார்.

குறைப் பிரசவத்தில் பிறந்துள்ளதால் குழந்தைகள் அனைவரும் இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளின் எடை 500 கிராம் வரை உள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

மருத்துவ உலகில் இதுவரை ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்து, உயிருடன் இருப்பது இதுவே முதல் முறை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT