உலகம்

பிரேசில்: கரோனா பலி 4 லட்சத்தை கடந்தது

செய்திப்பிரிவு

பிரேசிலில் கரோனாவினால் பலியானவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது.

இதுகுறித்து பிரேசில் சுகாதார அமைப்பு தரப்பில்,”பிரேசிலில் கடந்த சில மாதங்களாகவே கரோனா தொற்றால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 3,001 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரேசிலில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலில் ஜனவரி முதலே கரோனா அதிகரித்து வருகிறது. பிரேசிலில் இதுவரை 12% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

உலக அளவில் கரோனா பாதிப்பினால் அதிக பலி ஏற்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் , பிரேசில் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளன. பல்வேறு நாடுகளில் கரோனா பரவல் இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.

உலகம் முழுவதும் 14 கோடிக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

SCROLL FOR NEXT