உலகம்

தீவிரமடையும் கரோனா பரவல்: இந்தியாவுடனான எல்லையை மூடும் வங்கதேசம்

செய்திப்பிரிவு

இந்தியாவில் கரோனா பரவல் தீவிரமானதைத் தொடர்ந்து தனது எல்லையை வங்கதேசம் மூடியுள்ளது.

இதுகுறித்து வங்கதேச உள்துறை அமைச்சகம் தரப்பில், “ இந்தியாவில் கடந்த சில நாட்களாகக் கரோனா பரவல் தீவிரமாகி உள்ளது. எனவே அடுத்த 14 நாட்களுக்கு இந்தியாவுடனான எல்லையை மூட முடிவுச் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இரண்டு வாரங்களாக கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. நேற்று மட்டும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களது நாட்டு மக்களை இந்தியாவுக்குப் பயணிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளன.

இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் விமானத்தை 30% ஆஸ்திரேலிய அரசு குறைத்துள்ளது. அமீரகம், கனடா போன்ற நாடுகளும் இந்திய விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன.

உலகம் முழுவதும் கரோனாவுக்கு 14 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT