கிரீஸ் நாட்டு கடல் பகுதியில் அகதிகளை ஏற்றிச் சென்ற சிறிய படகு கவிழ்ந்ததில் 7 குழந்தைகள் உள்ளிட்ட 13 பேர் பலியாயினர்.
இதுகுறித்து கடலோரக் காவல் படையினர் கூறும்போது, “துருக் கியிலிருந்து ஐரோப்பிய நாடு களை நோக்கி சென்றுகொண்டி ருந்த சிறிய பிளாஸ்டிக் படகு கிரீஸ் கடல் பகுதியில் திடீரென விபத்தில் சிக்கியது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்தில் தேடுதல் வேட்டை நடத்தியதில் 13 பேரை சடலமாகவும் 15 பேரை உயிருடனும் மீட்டுள்ளோம். மேலும் காணாமல் போனவர்களை தேடி வருகிறோம்” என்றார்.