கேட்பரி சாக்லேட்டில் பன்றி மரபணு கூறுகள் இல்லை என்று மலேசிய முஸ்லிம் அமைப்பு கூறியுள்ளது. முன்னதாக கேட்பரி தயாரிப்புகளின் 2 சாக்லேட்களில் பன்றியின் மரபணுகூறுகள் இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து கேட்பரி நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தையும் புறக்கணிக்குமாறு மலேசியாவில் உள்ள முஸ்லிம் அமைப்புகள் மக்களுக்கு அழைப்பு விடுத்தன.
இந்நிலையில் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை சார்பில் திங்கள்கிழமை ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கேட்பரி நிறுவனத்தின் தொழிற்சாலையில் இருந்து 11 வகையான சாக்லேட்கள் மீண்டும் புதிதாக பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. முக்கியமாக பன்றியின் மரபணுகூறுகள் இருந்ததாகக் கூறப்படும் இரு வகை சாக்லேட்கள் முழுமையாக பரிசோதனைக்கு உள்படுத்தப் பட்டன. இதில் எந்த வகை சாக்லேட்களிலும் பன்றியின் மரபணுகூறுகள் கண்டு பிடிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் கேட்பரி நிறுவனம் தங்கள் மத நம்பிக்கையை பலவீனப்படுத்த முயற்சிக்கிறது என்றும் முஸ்லிம் அமைப்பு கள் குற்றம் சாட்டியிருந்தன.