உலகம்

ஐரோப்பிய நாடுகள் நிர்பந்தத்தால் அகதிகளுக்கு கதவை அடைத்தது ஜெர்மனி

செய்திப்பிரிவு

ஜெர்மனிக்கு வரும் அகதிகள் கட்டுப்படுத்தப்படுவார்கள் என்று அந்த நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டுப் போர் நடைபெறும் சிரியா, இராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான அகதிகள் கடல் மார்க்கமாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

அவர்களில் பெரும்பான் மையான அகதிகளுக்கு ஜெர்மனி அடைக்கலம் அளித்தது. இதுவரை அங்கு சுமார் 8 லட்சம் அகதிகள் குடியேறி உள்ளனர். ஆனால் இதர ஐரோப்பிய நாடுகள் ஜெர்மனி மீது கடும் அதிருப்தி தெரிவித்தன.

ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதம் மறைந்து இஸ்லாம் ஆதிக்கம் அதிகரித்துவிடும் என்று ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளின் அரசுகள் பகிரங்கமாகவே எதிர்ப்பை வெளிக்காட்டின.

பொதுவாக ஆபத்தான கடல் பயணம் மூலம் துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளின் தீவுகளில் கரையேறும் அகதிகள் அங்கிருந்து நடைபயணமாக ஜெர்மனிக்கு செல்கின்றனர்.

வழியில் மேசிடோனியா, ஹங்கேரி, குரேசியா, ஸ்லோவே னியா ஆகிய நாடுகளை அவர்கள் கடந்து செல்ல வேண்டும். அப்போது பாதுகாப்பு படையின ருக்கும் அகதிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இதனால் அந்த நாடுகள் தங்கள் எல்லைகளை மூடியுள்ளன.

இதன்காரணமாக ஆயிரக் கணக்கான அகதிகள் எல்லை யில் பரிதவித்து வருகின்றனர். அவர்களில் பலர் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப் படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் கடந்த நவம்பர் 13-ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தி 132 பேரை கொலை செய்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அகதிகள் போர்வையில் ஐரோப் பாவுக்குள் ஊடுருவி இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அகதி களுக்கு எதிரான போக்கை ஐரோப்பிய நாடுகள் கடுமையாக கடைப்பிடிக்கத் தொடங்கியுள் ளன. ஜெர்மனி மட்டுமே அகதி களுக்கு அடைக்கலம் அளித்து வந்தது.

இந்நிலையில் இதர ஐரோப்பிய நாடுகளின் நெருக்கடியால் ஜெர்மனியும் தற்போது அகதிகளை கைவிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் கூறியதாவது:

ஐரோப்பாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படு கின்றன. ஜெர்மனியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் எழுந்துள் ளன. அகதிகளை இப்போதே எச்சரிக்காவிட்டால் அவர்களின் எண்ணிக்கை பலமடங்காக உயர்ந்துவிடும். அவர்களை கட்டுப் படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. ஜெர்மனிக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை கணிச மாகக் குறைக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அகதிகளுக்கு அடைக்கலம் அளித்ததால் ஏஞ்சலா மெர்கெலின் கிறிஸ்டியன் டெமாகரடிக் கட்சி யில் அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந் துள்ளதாகக் கூறப்படுகிறது. அகதிகள் விவகாரத்தில் மெர்கெ லின் அறிவிப்புக்கு இதுவும் முக்கிய காரணம் ஆகும்.

SCROLL FOR NEXT