உலகம்

முஸ்லிம்கள் குடியேற தடை: குடியரசு கட்சி தலைவர் வலியுறுத்தல்

பிடிஐ

அமெரிக்காவில் முஸ்லிம் குடியேற்றத்துக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று குடியரசு கட்சியின் மூத்த தலைவர் டோனால்டு டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த ஆண்டு நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியில் அதிபர் வேட் பாளரை தேர்ந்தெடுக்க உட்கட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக இரு கட்சிகளிலும் மூத்த தலைவர்கள் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடியரசு கட்சியின் மூத்த தலைவர் டோனால்டு டிரம்ப் அதிபர் வேட்பாளர் களத்தில் முன்னணியில் உள்ளார். கலிபோர் னியா மாகாணம், சான் பெர்னார் டினோ நகரில் ஐ.எஸ். ஆதரவு பாகிஸ்தான் தம்பதியர் துப்பாக்கி யால் சுட்டதில் 14 பேர் பலியான சம்பவத்தை தனது பிரச்சாரத்தில் டோனால்டு குறிப்பிட்டு வருகிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியி ருப்பதாவது: அமெரிக்காவில் முஸ்லிம் குடியேற்றத்துக்கு முழு மையாக தடை விதிக்க வேண்டும். நமது நாட்டில் நடைபெறும் தீவிரவாத செயல்களை தடுத்து நிறுத்த இதைத் தவிர வேறு வழியில்லை.

அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள், மசூதிகளின் செயல் பாடுகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். தீவிர வாதிகள் எங்கிருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும். இல்லையெனில் தீவிரவாத பிரச்சினை ஓயாது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

டோனால்டின் கருத்துக்கு குடியரசு கட்சியின் இதர வேட் பாளர்கள் கண்டனம் தெரிவித்துள் ளனர். முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் சகோதரர் ஜெப் புஷ் கூறியபோது, மதவாதத்தைத் தூண்டும் வகையில் டோனால்டு பேசியுள்ளார், அவரது கருத்துகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT