உலகம்

தெற்காசிய பிராந்திய ஒருங்கிணைப்புக்கு இந்தியா உதவும்: ஐ.நாவுக்கான நிரந்தர பிரதிநிதி தகவல்

பிடிஐ

பிராந்திய ஒருங்கிணைப்பில் இந்தியா உறுதி பூண்டுள்ளது. ஆப்கன்-பாகிஸ்தான் இடையே யான வர்த்தகம் மற்றும் போக்கு வரத்து உடன்படிக்கை உட்பட அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும் என ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி அசோக் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆப்கானிஸ் தான் பாதுகாப்பு நிலவரம் குறித்த ஐ.நா. பொதுச் சபையில் அசோக் முகர்ஜி மேலும் பேசியதாவது:

தெற்காசியாவின் பெரிய சந்தைகளுக்கு சுதந்திரமாக வர்த்தக போக்குவரத்தை அனு மதித்தால் மட்டுமே ஆப்கானிஸ் தான் தனது பொருளாதார தகுதி நிலையில் இலக்கை எட்டும்.

ஆப்கானிஸ்தானின் அனைத்து ஏற்றுமதிகளுக்கும் இந்தியா தன் சந்தையை திறந்து விட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் வர்த்தக வாகனங்களை எங்கள் எல்லைக்குள் அழைப்பதில் ஆர்வமாக இருக்கிறோம்.

மிகப்பெரிய அளவிலான பிராந்திய ஒருங்கிணைப்பில் இந்தியா ஈடுபாடு காட்டி வருகிறது. இதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT