உலகம்

துருக்கியில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா

செய்திப்பிரிவு

துருக்கியில் தொடர்ந்து கரோனா அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 50, 678 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து துருக்கி சுகாதாரத் துறை தரப்பில்” நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 50,678 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 276 பேர் பலியாகி உள்ளனர். துருக்கியில் உள்ள 81 மாகாணங்களில் 58 மாகாணங்களில் கரோனா தொற்று தீவிரமாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் இதுவரை 1 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் தீவிரம் அதிகரித்து வருகிறது.

கடந்த சில மாதங்களாக கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன.

உலகம் முழுவதும் சுமார் 13 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT