உலகம்

மறைந்த இளவரசர் பிலிப்பின் பிரபல புகைப்படங்கள்

செய்திப்பிரிவு

பிரிட்டன் இளவரசரும், ராணி எலிசபெத்தின் கணவருமான பிலிப் இன்று காலமானார். அவருக்கு வயது 99.

முன்னாள் கப்பற்படை வீரரான பிலிப், ராணி எலிசபெத்தைத் திருமணம் செய்த 5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இரண்டாம் எலிசபெத் பிரிட்டனின் ராணியாக முடிசூட்டிக் கொண்டார். இளவரசர் பிலிப் பெரும்பாலும் மக்கள் நலப் பணிகளிலும், தொண்டுப் பணிகளிலும் ஈடுபட்டார். 70 ஆண்டுகளுக்கும் மேலாக ராணி எலிசபெத்துக்கு உற்ற துணையாக இருந்து வந்தார்.

பொது நிகழ்வுகளிலும், அரசக் குடும்ப விருந்து நிகழ்வுகளிலும் இளவரசர் பிலிப் கூறிய ஜோக்குகள் இன்றளவும் பிரிட்டனில் பிரபலம். தனது நகைச்சுவை உணர்வாலும் இளவரசர் பிலிப் பிரிட்டன் மக்களால் கவரப்பட்டார். 2017-ம் ஆண்டு தனது 96-வது வயதில் பிலிப், மக்கள் நலப் பணிகளிலிருந்து விலகினார். வரும் ஜூன் மாதம் 100-வது பிறந்த நாளை பிலிப் கொண்டாட இருந்த நிலையில் இன்று காலமானார்.

இளவரசர் பிலிப், ராணி எலிசபெத்தின் மிகப் பிரபலமான புகைப்படங்களை இந்தத் தொகுப்பில் காணலாம்,

SCROLL FOR NEXT