பிரான்ஸில் நிகழ்ந்த தீவிரவாத தாக்கு தலில் மூளையாக செயல்பட்ட தீவிர வாதியை குறிவைத்து அடுக்கு மாடிக் குடியிருப்பில் போலீஸார் நேற்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, ஒரு பெண் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். மேலும் ஒருவர் கொல்லப்பட்டார். 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தலைநகர் பாரீஸில் உள்ள கால்பந்து விளையாட்டு மைதானம், இசை அரங்கம், ஓட்டல்கள் உள்ளிட்ட 6 இடங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 129 அப்பாவி பொதுமக்கள் பலியாயினர். 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட 8 தீவிரவாதிகளில் 7 பேர் கொல் லப்பட்டதாகவும் ஒருவர் தப்பியதாக வும் போலீஸார் ஏற்கெனவே தெரிவித் திருந்தனர். இந்நிலையில், இந்தத் தாக்குதலுக்கு பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஐஎஸ் தீவிரவாதி அப்துல் ஹமீத் அபாவுத் மூளையாக செயல்பட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் பாரீஸின் புறநகர் பகுதியான செயின்ட்-டெனிஸில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் அபாவுத் தங்கியிருப்பதாகவும் அவருடன் ஆயுதம் ஏந்திய 5 பேர் இருப்பதாகவும் ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, நேற்று அதிகாலை 4 மணிக்கு அப்பகுதியை நூற்றுக் கணக்கான போலீஸாரும் பாதுகாப்புப் படை வீரர்களும் சுற்றி வளைத்தனர். அப்பகுதியில் இருந்த பொதுமக்களை வெளியேற்றினர். பின்னர் ஆயுதம் ஏந்திய வீரர்கள் தீவிரவாதிகள் தங்கியிருந்த குடியிருப்பை நெருங்கியபோது, தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை பெண் தீவிரவாதி ஒருவர் வெடிக்கச் செய்துள்ளார். அதில் அந்தப் பெண் பலியானார்.
பின்னர் அங்கு மறைந்திருந்த தீவிர வாதிகள் போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையடுத்து இருதரப் புக்கும் இடையே சுமார் 6 மணி நேரம் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் தீவிரவாதிகளில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 7 பேரை கைது செய்திருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
முக்கிய தீவிரவாதி அபாவுத் கொல்லப் பட்டானா, உயிருடன் பிடிபட்டானா என்ற தகவலை போலீஸார் தெரிவிக்கவில்லை. எனினும், அவன் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.