இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான உறவை மேம்படுத்த தற்போது நடைபெறும் நடவடிக்கைகள் அனைத்தும் தொடர வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறையின் துணை செய்தி தொடர்பாளர் மெர்ரி ஹார்ப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"இந்தியா- பாகிஸ்தான் தற்போது மேற்கொண்டு வரும் நல்லுறவு நடவடிக்கைகள் எதிர்காலத்திலும் தொடரும் என நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம்.
அவை இரு நாட்டு வெளியுறவு கொள்கைகளை வலு சேர்ப்பது மட்டும் அல்லாமல், அதற்கு மேலாக இரு நாடுகளின் முக்கியத்துவம் வாய்ந்த செயல்பாடுகளில் ஒன்றாக இந்த நல்லுறவு பேச்சுவார்த்தை இருக்கும்.
இது குறித்து தற்போதைய நிலையில் பிரத்யேகமாக பேச இயலா விட்டாலும், பிற்காலத்தில் இவை பேச வேண்டிய காரியமாக இருக்கும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது” என்றார் அவர்.