உலகம்

இனப்படுகொலை என்று ஜெயலலிதா கூறியதற்கு இலங்கை கடும் கண்டனம்

செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா அளித்த மனுவில் 'இலங்கையில் நடந்த இனப்படுகொலை' என்று குறிப்பிட்டதற்கு இலங்கை அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளரும், தகவல் தொடர்பு அமைச்சருமான கெஹேலியா ரம்புக்வெல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

"இலங்கையில் நடந்ததை இனப்படுகொலை என்று வர்ணிப்பது தவறு, இது குறித்து இந்திய அரசுக்குத் எங்களது முறையான ஆட்சேபத்தையும் தெரிவிப்போம். இந்தியாவில் நிலையான தனிப்பெரும்பான்மை அரசு அமைந்தது பற்றி இலங்கை மகிழ்ச்சி அடைந்துள்ளது. தேர்தலுக்கு முன்பும் நாங்கள் இதையே கூறினோம், இந்தியாவில் நிலையான ஆட்சி இலங்கைக்கு நல்லது.

இன்று ஜெயலலிதாவுக்கு முன்பு டெல்லியில் இருந்த செல்வாக்கு இருக்காது. இது பற்றி நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். பிரதமர் நரேந்திர மோடி சரியான பக்கத்தில் இருப்பார் என்று நம்புகிறோம் அதாவது இலங்கை பக்கம்" என்று கூறியுள்ளார் அவர்.

SCROLL FOR NEXT