உலகம்

அமெரிக்க அதிபர் போட்டியிலிருந்து ஜிண்டால் விலகல்

பிடிஐ

குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாள ருக்கான போட்டியிலிருந்து இந்திய வம்சாவளி அமெரிக்கர் பாபி ஜிண்டால் விலகியுள்ளார்.

அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான பந்தயத்தில் போட்டியிட்ட முதல் இந்திய வம்சாவளி அமெரிக்கரான பாபி ஜிண்டால் தற்போது லூசியானா மாகாண ஆளுநராக உள்ளார். குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிட ஆதரவு திரட்டி வந்தார்.

இந்நிலையில், ஏராள மானவர்கள் முயற்சி செய்து வருவதால், இப்போது என் முறையில்லை என கூறி போட்டியிலிருந்து ஜிண்டால் விலகியுள்ளார். இதுதொடர் பாக பாக்ஸ் செய்தி தொலைக் காட்சிக்கு அவர் அளித்த பேட்டி யில், “வேட்பாளர் போட்டிக்கான பிரச்சாரத்தை நான் ரத்து செய்துவிட்டேன். அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இறங்கியது எனக்கு மிகப்பெரும் கவுரவம். 45 ஆண்டுகளுக்கு முன் என் பெற்றோர் சுதந்திரம், வாய்ப்பைத் தேடி இங்கு வந்தனர்” என்றார்.

SCROLL FOR NEXT