பிரதமர் மோடியின் பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகளை பெருமளவு ஆதரிப்பதாக சர்வதேச செலாவணி நிதியம் தெரிவித்துள்ளது.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் ஐ.எம்.எப். செய்தி தொடர்பாளர் கிரி ரைஸ்கூறும் போது, “பிரதமர் நரேந்திர மோடி அரசு மேற்கொண்டு வரும் பொருளாதார சீர்த்திருத்தங்களை பெருமளவு ஆதரிக்கிறோம். இந்தச் சீர்திருத்தங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது” என்றார்.
துருக்கியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் கலந்து கொள்ளும் நிலையில் ஐ.எம்.எப் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டீன் லகார்ட் கலந்து கொள்கிறார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.