உலகம்

விமான படிக்கட்டில் தடுமாறி விழுந்த அதிபர் ஜோ பைடன்

செய்திப்பிரிவு

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் 3 மசாஜ் நிலையங் களில் அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக அங்குள்ள ஆசிய அமெரிக்க சமூகத்தினரை சந்தித்து பேச அதிபர் ஜோ பைடன் வாஷிங்டனில் இருந்து புறப்பட்டார்.

விமானப் படிக்கட்டுகளில் அவர் வேகமாக ஏறும்போது, அவர் கால் தடுக்கி விழுந்து விட்டார். பிறகு எழுந்து மேலே சென்ற அவர், தன்னை வழி யனுப்ப வந்தவர்களை நோக்கி கை அசைத்து உள்ளே சென்றார்.

காற்று பலமாக வீசியதால் அதிபர் கால் இடறி விழுந்துள்ளார். அவர் 100 சதவீதம் நலமுடன் உள்ளார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.

SCROLL FOR NEXT