ஆன்லைன் மூலம் பொருள்களை வாங்கும் போக்கு அதிகரித்துள்ளது. கோடைக் காலத்தில் வர்த்தகம் 155 சதவீதம் அதிகரித்துள்ளது.
டெல்லி, மும்பை, பெங்களூர், சென்னை ஆகிய நகரங்களில் 3,500 வர்த்தகர்கள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆன்லைன் மூலமான வர்த்தகம் இந்த கோடைக்காலத்தில் 155 சதவீதம் அதிகரித்துள்ளதாக அசோசேம் செயலர் ஜெனரல் டி.எஸ். ரவாத் தெரிவித்தார்.
அதிகரித்து வரும் எரிபொருள் விலை, ஆன்லைன் வர்த்தகத்தில் அளிக்கப்படும் தள்ளுபடி சலுகைகள், தேர்வு செய்வதற்கு அதிக எண்ணிக்கையிலான பொருள்கள் ஆகியன வாடிக்கை யாளர்களை ஆன்லைன் மூலமாக பொருள்களை தேர்வு செய்ய தூண்டியுள்ளன.
டெல்லியில் மிக அதிக எண்ணிக்கையில் (78%) ஆன்லைன் மூலமாக வர்த்த கத்தை தேர்வு செய்துள்ளனர். 14 சதவீதம் பேர் மார்க்கெட் பகுதிகளுக்கு பொருள்களை வாங்கச் சென்றுள்ளனர். 7 சதவீதம் பேர் அங்காடிகள் மற்றும் மால்களுக்குச் சென்றுள்ளனர்.