உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.2 ஆகப் பதிவு

செய்திப்பிரிவு

ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆகப் பதிவானது.

இதுகுறித்து ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தரப்பில், “ஜப்பானின் வடகிழக்குப் பகுதியான மியாக்கி மாகாணத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆகப் பதிவானது. இதன் ஆழம் 60 கிலோ மீட்டர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

2011ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 15,000க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 1 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன.

4 டெக்டானிக் பிளேட்கள் சந்திக்கும் இடத்தில் ஜப்பான் அமைந்திருப்பதால், ஆண்டொன்றுக்கு உலகில் ஏற்படும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஜப்பானில் மட்டும் 20% நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

SCROLL FOR NEXT