உலகம்

இந்திய வம்சாவளி நீதிபதிக்கு அமெரிக்க விருது

பிடிஐ

அமெரிக்காவில் உஷிர் பண்டிட் தூரந்த் என்ற இந்திய வம்சாவளி பெண் நீதிபதிக்கு கவுரவம் மிக்க ‘தெற்காசிய பொதுப் பணி விருது’ வழங்கப்பட்டுள்ளது.

சட்டத்துறையில் இவரது பங்களிப்பை பாராட்டி கியூன்ஸ் மாவட்ட அட்டர்னி அலுவலகம் இவ்விருதை வழங்கியது.

பண்டிட் தூரந்த்துக்கு 10 வயதா கும்போது அவரது குடும்பத்தினர் இந்தியாவில் இருந்து அமெரிக் காவில் குடியேறினர். “எங்கள் அலுவலகத்தின் தெற்காசிய பொதுப் பணி விருதை பெறும் முதல் நபர் பண்டிட் தூர்ந்த்” என்றும் மாவட்ட அட்டர்னி ரிச்சர்டு பிரவுன் குறிப்பிட்டார்.பண்டிட் தூரந்த், முது நிலை துணை மாவட்ட அட்டர்னியாக பணியாற்றி வருகிறார்.

இம்மாத தொடக்கத்தில் கியூன்ஸ் கவுன்ட்டியில் சிவில் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் கியூன்ஸ் கவுன்ட்டியில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் தெற்காசிய அமெரிக்கர் என்ற பெருமையை பெற்றார்.

SCROLL FOR NEXT