பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தாக்கு தல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள், அகதிகள் போர்வையில் பாரீஸுக் குள் ஊடுருவியது தெரியவந் துள்ளது.
கடந்த 13-ம் தேதி இரவு பாரீஸில் கால்பந்து மைதானம், இசை அரங்கு, ஹோட்டல்கள் என 6 இடங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 129 பேர் உயிரிழந்தனர். 350 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 7 தீவிரவாதிகள் மூன்று குழுக்களாக பிரிந்து தாக்குதல் நடத்தியிருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 3 பேரின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாரீஸில் உள்ள பத்தக்லேன் இசை அரங்கில் வெடித்துச் சிதறிய தீவிரவாதியின் உடலில் இருந்து சிரியா பாஸ்போர்ட் கைப்பற்றப் பட்டுள்ளது. அந்த தீவிரவாதியின் பெயர் அகமது அல்முகமது (25).
கடந்த அக்போடர் 3-ம் தேதி சிரியாவில் இருந்து அகதிகளோடு படகில் வந்த அவர் கிரீஸ் நாட்டின் லெரோஸ் தீவில் கரையேறி உள் ளார். அங்கிருந்து குரேசியா, ஆஸ் திரியாவை நடைபயணமாக கடந்து செர்பியாவுக்கு சென்றுள்ளார். அந்த நாட்டில் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளார். அங்கிருந்து பாரீஸுக்குள் அகமது எவ்வாறு ஊடுருவினார் என்பது தெரியவில்லை.
மற்றொரு தீவிரவாதியின் உடலில் இருந்து எகிப்து பாஸ் போர்ட் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரது பெயர், விவரத்தை போலீஸார் வெளியிடவில்லை.
அந்த தீவிரவாதியும் சிரியாவில் இருந்து அகதி போர்வையில் கிரீஸ் வந்து அங்கிருந்து பாரீஸுக்குள் நுழைந்துள்ளான். இருவரும் பாரீஸை அடைய சுமார் ஒரு மாதம் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.
தீவிரவாத தாக்குதல்களை ஒருங்கிணைத்து வழிநடத்தியதாகக் கூறப்படும் உமர் இஸ்மாயில் முஸ்தபா (29) பாரீஸின் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்தவர். 2004 முதல் 2010 வரை அவர் மீது 8 திருட்டு வழக்குகள் உள்ளன.
தீவிரவாதிகளோடு தொடர் புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 2010-ம் ஆண்டில் பாரீஸ் போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் விசாரணைக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பத்தக்லேன் இசை அரங்கு தாக்குதலில் முஸ்தபா மனிதகுண் டாக வெடித்துச் சிதறியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மற்றொரு தீவிரவாதியும் பாரீஸ் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர் யார் என்பதை அறிய உளவுத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
தீவிரவாதிகள் வந்த கார் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தது ஆகும். பாரீஸ் புறநகர் பகுதியில் ஏ.கே.47 துப்பாக்கிகள், வெடிமருந்துகளுடன் கேட்பாரற்று நின்ற அந்த காரை பாரீஸ் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
எனவே தாக்குதல் நடத்திய 7 தீவிரவாதிகளில் 3 பேர் பெல்ஜி யத்தை சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
அதிபர் ஹோலாந்தேவை கொல்ல திட்டம்
பாரீஸ் நகர மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியை பிரான்ஸ் அதிபர் ஹோலாந்தே ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார். தீவிரவாதிகள் அவரை குறிவைத்து கால்பந்து மைதானத்துக்கு வந்துள்ளனர்.
மைதான வாயிலில் தாக்குதல் நடத்திய 2 தற்கொலைப் படை தீவிரவாதிகளும் போட்டியை காண டிக்கெட் வாங்கியுள்ளனர். அவர்கள் நுழைவுவாயிலில் வந்தபோது பாதுகாப்புப் படை வீரர்கள் சந்தேகமடைந்து தடுத்து நிறுத்தியதால் இருவரும் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர்.