ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் அதிகாரபூர்வ இதழ் தபிக்கில் ரஷ்ய விமானத்தை வீழ்த்திய வெடிகுண்டின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
எகிப்தின் சினாய் அருகே வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானம் நொறுங்கியதில் 224 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
ஐஎஸ் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஷ்வெப்ஸ் கோல்டு குளிர்பான குப்பி, டெடனேட்டர் மற்றும் ஒரு சுவிட்ச் ஆகியவை இருந்தன.
“கலிஃபேட் முஸ்லிம்களை கோழைத்தனமாக குண்டு வீசி கொலை செய்தவர்கள் தங்கள் விமானத்தில் பாதுகாப்பாக இருப்பதாக நினைத்தனர். ஓட்டுநர் அறையில் பாதுகாப்பாக இருப்பதாகக் கருதியவர்கள் மீதும் பழிதீர்க்கப்பட்டது” என்று தபிக் இதழில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பலியான ரஷ்யர்களின் பாஸ்போர்ட் படங்களையும் ஐஎஸ் வெளியிட்டுள்ளது.
சிரியா, இராக்கில் அமெரிக்கத் தலைமை கூட்டுப்படைகளைச் சேர்ந்த ஒரு விமானத்தைத் தகர்க்கவே முதலில் திட்டமிடப்பட்டதாகவும், பிறகுதான் ரஷ்யாவும் வான்வழித் தாக்குதலில் ஈடுபட முடிவை மாற்றிக் கொண்டதாகவும் ஐஎஸ் தெரிவித்துள்ளது.