உலகம்

பிரேசிலில் உருமாற்றம் அடைந்த கரோனா: சீனாவின் தடுப்பு மருந்து சிறப்பாக இல்லை: ஆய்வில் தகவல்

செய்திப்பிரிவு

பிரேசிலில் பரவும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸுக்கு சீனாவின் கரோனா தடுப்பு மருந்து சிறப்பாக செயல்படவில்லை என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராய்டர்ஸ் வெளியிட்ட செய்தியில், “ பிரேசிலில் பரவும் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸுக்கு சினாவின் கரோனா தடுப்பு மருந்தான சினோபார்ம் போதிய கரோனா எதிர்ப்பு சக்திகளை உருவாக்கவில்லை எனு சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்த கேள்விக்கு சினோபார்ம் நிறுவனம் இதுவரை பதிலளிக்கவில்லை.

இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளுக்கு சினோபார்ம் கரோனா தடுப்பு மருந்துகளை சீனா ஏற்றுமதி செய்து வருகிறது.

உருமாறிய கரோனா வைரஸ்

பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவியது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தின. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் பிரான்ஸில் கரோனா தொற்று தற்போது கட்டுக்குள் உள்ளது.

சினோபார்ம், ஜான்சன் & ஜான்சன், ஸ்புட்னிக், மாடர்னா, பைசர் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகள் புதிய வகை கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

உலகம் முழுவதும் 11 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

SCROLL FOR NEXT