அமெரிக்காவில் பெண்ணிடம் பர்ஸ் திருடியவர், அந்தப் பெண்ணுக்கே பேஸ்புக் மூலம் நண்பராகி அந்தப் பெண்ணால் அடையாளம் காணப்பட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளான்.
படகு நிலையம் ஒன்றில் ஒரு பெண்ணிடம் இருந்து ரிலி முல்லின்ஸ் (28) என்பவர் கைப்பையைத் திருடிச் சென்றார். சில நாட்களில் அந்தப் பெண் ணுக்கு பேஸ்புக் மூலம் நண்பரா னார்.
அவனுடைய பேஸ்புக் பக்கத்தில் அவன் கையில் முக்கோண வடிவிலான 'டாட்டூ' குத்தியிருக்கும் படம் இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், தன் கைப்பையைத் திருடியவன் அவன் தான் என்று அடையாளம் கண்டார்.
இதுதொடர்பாக அந்த பெண் தனது பையை திருடியவர் அவர்தான் என காவல் துறையிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில், திருடன் கைது செய்யப்பட்டுள்ளான்.
என்னுடைய பர்ஸில் இருந்த அடையாள அட்டையை வைத்து அந்தத் திருடன் எனக்கு பேஸ்புக் மூலம் நண்பராகி இருக் கிறான் என்று அந்தப் பெண் தெரிவித்தார். -ஐ.ஏ.என்.எஸ்.