உலகம்

எல்லா தீவிரவாத குழுக்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுங்கள்: பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

ஹக்கானி உட்பட அனைத்து தீவிரவாத குழுக்களுக்கு எதிரா கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாகிஸ்தானிடம் அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:

அனைத்து தீவிரவாத குழுக் களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தானிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகி றோம். பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் கடந்த திங்கள்கிழமை பென்டகன் (அமெரிக்க ராணுவ தலைமையகம்) வந்தபோதும் அவரிடம் இதை நாங்கள் வலியுறுத்தினோம்.

அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ் தானில் உள்ள அமெரிக்க படைகளுக்கு எதிராக ஹக்கானி குழு உள்ளிட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி ரஹீல் ஷெரீபிடம் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டர் கேட்டுக்கொண்டார்.

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துள்ள உதவிகளை அந்நாடு பழங்குடியினர் பகுதியில் தீவிர வாதிகளை ஒடுக்க பயன்படுத்து கிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க கூட்டணிப் படை களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதால் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதி அளிக்கிறது. இதில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 30 கோடி டாலரை விடுவிப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையே ஒத்துழைப்பு அதிகரிக்க அமெரிக்கா விரும்புகிறது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அக்டோபரில் அமெரிக்கா வந்திருந்தார். அவரிடம், ‘பாகிஸ்தான் அரசு பாரபட்சமின்றி அனைத்து தீவிரவாத குழுக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதிபர் ஒபாமா வலியுறுத்தினார்.

இவ்வாறு பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.

SCROLL FOR NEXT