கொலை வழக்கு ஒன்றில் மாற்றுத் திறனாளி ஒருவருக்கு பாகிஸ்தான் மரண தண்டனை நிறைவேற்ற தயாராவதை அடுத்து இந்த ஆண்டில் மட்டும் 300-வது மரண தண்டனையை நிறைவேற்றுகிறது பாகிஸ்தான்.
முடக்குவாத நோய் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் வாழ்க்கையை ஓட்டி வரும் அப்துல் பாசித் என்பவருக்கு 2009-ம் ஆண்டு கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து உரிமைகள் குழுவினர் சக்கர நாற்காலியில் வாழும் ஒருவரை தூக்கு மேடைக்கு எப்படி ஏற்றலாம் என்று கேள்விகள் எழுப்ப பல முறை அவரைத் தூக்கிலிடுவது தள்ளி வைக்கப்பட்டது.
ஆம்னெஸ்டி அமைப்பு பாகிஸ்தானின் அதிவேக மரண தண்டனை நிறைவேற்ற ‘இழுக்கை’ கண்டித்து, “உலகின் மிக மோசமான மரண தண்டனை நிறைவேற்ற நாடு என்ற வெட்கக் கேடான நிலையை எட்டியுள்ளது பாகிஸ்தான்” என்று சாடியுள்ளது.
பெஷாவர் பள்ளித் தாக்குதலில் பல குழந்தைகள் பலியானதை அடுத்து மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப் படுத்தியது முதல் 299 பேரை தூக்கிலிட்டுள்ளதாக உரிமைகள் அமைப்பு தெரிவிக்கிறது.
அக்டோபர் மாதம் மட்டும் 45 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனை ‘மரண மாதம்’ என்று வர்ணிக்கிறது ஆம்னெஸ்டி. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ புள்ளி விவரங்கள் இல்லை.
இவ்வளவு மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டும், பயங்கரவாதம் முறியடிக்க முடியாத ஒன்றாக வளர்ந்தே வருகிறது என்று உரிமைகள் குழுவினர் தெரிவிக்கின்றனர்.