சீனாவில் வறுமை ஒழிப்புக்காகப் பாடுப்பட்டவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி பெய்ஜிங்கில்நேற்று நடைபெற்றது. இதில் அதிபர் ஜி ஜின்பிங் பேசியதாவது:
சீனாவில் வறுமையை ஒழிக்க கடந்த 40 ஆண்டுகளாக நடந்த போராட்டம் முழு வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் 770 மில்லியன் மக்களை வறுமையில் இருந்து மீட்டுள்ளோம். கிராமங்களில் வசிக்கும் அனைத்து மக்களும் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். சீனாவில் இன்னொரு அதிசயம் நிகழ்த்திக் காட்டப்பட்டுள்ளது. இந்த சாதனை வரலாற்றில் முக்கிய இடம் பெறும். இவ்வாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார்.