உலகம்

அதிபரின் அதிகாரத்தை குறைக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல்

ஐஏஎன்எஸ்

இலங்கையில் அதிபரின் பெரும் பாலான அதிகாரங்களை நாடாளு மன்றத்துக்கு மாற்றும் பரிந்து ரைக்கு அந்நாட்டு அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது.

அன்றாட நிர்வாகப் பணிகள் தொடர்பாக அதிபருக்கு உள்ள அதிகாரங்களை ரத்துசெய்யும் பரிந்துரையை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அளித்திருந்தார். மேலும் புதிய தேர்தல் நடைமுறைக்கும் ஒப்புதல் கோரியிருந்தார். இவற்றுக்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

முன்னதாக இது தொடர்பாக அதிபர் சிறிசேனா கூறும்போது, “நாடாளுமன்றத்துக்கு கட்டுப்பட்ட புதிய தேர்தல் நடைமுறையை அறிமுகம் செய்யவும் அரசின் அன்றாட நிர்வாகப் பணிகளில் அதிபரின் அதிகாரங்களை நாடாளு மன்றம் மற்றும் சுதந்திரமான ஆணையங்களுக்கு மாற்றவும் விரும்புகிறேன்” என்றார்.

“புதிய அரசியல் சாசனம் இயற்றுவது மற்றும் தேர்தல் அறிக் கையில் கூறப்பட்ட வாக்குறுதி களை நிறைவேற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. மனித உரிமைகள், அரசுப் பணி, நீதிமன்ற ங்கள், லஞ்சம் மற்றும் ஊழல் போன்ற முக்கிய விவகாரங்கள் தொடர்பான அமைப்புகளை புதிய அரசு உருவாக்கியுள்ளது. வறு மையை ஒழிக்கவும், இலவச மருத்து வம் மற்றும் கல்வியை வலுப்படுத் தவும் பல்வேறு திட்டங்களை புதிய அரசு நடைமுறைப்படுத்தி யுள்ளது” என்றும் அவர் குறிப் பிட்டார். இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்தலில் சிறிசேனா அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

SCROLL FOR NEXT