ஈரானில் பால் புதுமையின (எல்ஜிபிடி) சிறுவர், சிறுமியர்களை மின்சாரம் பாய்ச்சி சித்திரவதைக்கு உள்ளாக்குவதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், “ஈரானில் பால் புதுமையின (எல்ஜிபிடி) சிறுவர், சிறுமிகளை மின்சாரம் செலுத்திக் கொடுமைப்படுத்துவது, ஹார்மோன் சிகிச்சை அளிப்பது தொடர்பாக வெளிவந்த தகவல் மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. இந்தக் கொடுமைகள் மனிதத் தன்மையற்றவை. இம்மாதிரியான அரசின் நடைமுறைகள் சர்வதேச விதிகளுக்கு முரணானவை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில், ஒரு பாலினத்தவருக்கு எதிராக ஈரான் தூக்கு தண்டனை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் பால் புதுமையினர் குறித்த புரிதல் கடந்த சில ஆண்டுகளாகத்தான் ஏற்பட்டுள்ளது, ஐரோப்பா, மேற்கத்திய நாடுகளில் பால் புதுமையினர் சார்ந்த புரிதல் மக்களிடையே நன்கு வெளிப்பட்டுள்ளது.
எனினும் அரேபியா மற்று ஆசிய நாடுகளில் பால் புதுமையினர் சார்ந்த புரிதல் அங்குள்ள சமூகத்தினரிடம் இல்லாததாலும், சமூகத்தில் மாற்றம் ஏற்படுவதை அங்குள்ள மத அமைப்புகள் எதிர்ப்பதாலும், பால் புதுமையினரைக் குற்றம் புரிந்தவராகப் பார்க்கும் மனநிலைதான் உள்ளது என்று சமூகச் செயற்பாட்டாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.