உலகம்

வடகொரிய பொருளாதார சரிவு: அமைச்சகத்தை சாடும் அதிபர் கிம்

செய்திப்பிரிவு

வடகொரியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சேதத்துக்கு மூத்த அதிகாரிகளை அதிபர் கிம் ஜோங் உன் கடுமையாக விமர்சித்தார்.

இதுகுறித்து வடகொரியா தேசிய ஊடகம் வெளியிட்ட செய்தியில் "வடகொரிய அமைச்சகத்துக்கு ஒரு மாதத்திற்கு முன்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மூத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், பொருளாதாரத்தை மீட்க அவர்கள் அளித்த திட்டங்கள் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அவர்களை வடகொரிய அதிபர் கிம் விமர்சித்தார். மேலும் பொருளாதாரத் திட்டங்களை வடிவமைக்க அமைச்சகம் தவறிவிட்டது என்றும் கிம் கடுமையாக விமர்சித்தார்" என்று சேதி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஐந்து வருடங்கள் நாட்டிற்கு மோசமான காலமாக இருந்தது. அனைத்துத் துறைகளிலும் பொருளாதாரம் சரிந்துள்ளது. இதனை நாங்கள் ஆழமாகப் பகுப்பாய்வு செய்ய இருக்கிறோம் என்று கிம் தெரிவித்திருந்தார்.

உலகம் முழுவதும் கரோனாவில் பல்வேறு நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகும் போது வடகொரியாவில் மட்டும் கரோனா தொற்று குறித்த எந்தத் தகவலும் வெளியிடப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் அதிபர் கிம், தங்கள் நாட்டில் ஒருவருக்குக் கூட கரோனா தொற்று இல்லை என்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அதில் தனது ஆட்சியில் குறைகள் இருந்தால் தன்னை பொதுமக்கள் மன்னிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT