புகைப்படவியலாளர்: நிக்கோலஸ் (ஏஎஃப்பி) 
உலகம்

கரோனா; இரண்டு உலக போர்களை கண்ட 117 வயதாகும் கன்னியஸ்திரி

செய்திப்பிரிவு

இரண்டு உலக போர்கள், கரோனா என பல சோதனைகளை கடந்து தனது 117 வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார் பிரான்ஸை சேர்ந்த கன்னியஸ்திரி ஒருவர்.

117 வயதாகும் லூசில்லா ராண்டன் 1904 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி பிறந்திருக்கிறார்.

லூசில்லாவின் ஓய்வு விடுதியில் 81 பேர் கரோனாவினால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் கடந்த மாதம் லுசில்லாவும் பாதிக்கப்பட்டுள்ளார். இதில் 10 பேர் பலியாக, லூசில் எதிர் நீச்சல் போட்டு கரோனாவை வென்று இருக்கிறார்.

இவ்வாறு இரண்டு உலக போர்கள், கரோனா வைரஸ் என பல்வேறு ஆபத்தான காலக்கட்டங்களை கடந்து இன்று (வியாழன்) தனது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடி இருக்கிறார்.

கரோனாவிலிருந்து மீண்டது குறித்து லூசில்லா கூறும்போது, “ எனக்கு கரோனா வந்தபோது எனக்கு களைப்பாக இருந்தது. ஆனால் அதனை நான் உணரவில்லை” என்றார்.

லுசில்லாவுக்கு பிடித்த உணவு லாப்டரும் ஒரு கிளாஸ் ஒயினும் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT