உலகம்

மாலியில் ஐநா முகாம் மீது தாக்குதல்: 3 பேர் பலி

ராய்ட்டர்ஸ்

மாலியில் ஐநா முகாம் மீது ராக்கெட் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 பேர் பலியானதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஆலிவர் சல்காடோ தெரிவித்துள்ளார்.

மாலியின், வடக்கு கைடல் பகுதியில் உள்ள ஐநா அமைதி காப்பாளர்கள் முகாம் மீது சனிக்கிழமையன்று ராக்கெட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 அமைதி காப்பாளர்களும் ஒரு ஒப்பந்ததாரரும் பலியாகினர்.

மேலும், காயமடைந்த 4 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் ஆலிவர் சல்காடோ தெரிவித்தார்.

கடந்த வாரம் மாலியின் பமாகோவில் ஆடம்பர விடுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியாகினர், இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதன் எதிரொலியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

SCROLL FOR NEXT