உலகின் மிகப்பெரிய அருங் காட்சியமான ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தில், ஹெச்1பி விசா தொடர்பான கண்காட்சி இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவில் பணி நிமித்த மாக ஹெச்1பி விசா வழங்கப் படுகிறது. வரும் 29-ம் தேதி இதன் 25-வது ஆண்டு நிறைவை யொட்டி, தெற்காசிய மற்றும் ஆசிய அமெரிக்க கலைஞர்கள் 17 பேர் சேர்ந்து ஹெச்1பி விசா தொடர்பான கண்காட்சியை அமைத்துள்ளனர்.
இக்கண்காட்சி அமெரிக்க குடியுரிமை வரலாற்றை விளக் கும் வகையில் அமைந்துள்ளது.
இதுதொடர்பாக ஸ்மித்சோ னியன் ஆசிய பசிபிக் அமெரிக்க மைய இயக்குனர் கோன்ராட் கூறும்போது, “தெற்காசிய இந்தி யர்கள் கோணத்தில் அமெரிக்க வரலாற்றை விளக்கும் வகையில் இக்கண்காட்சி அமைந்துள்ளது” என்றார்.
அமெரிக்க கனவுகளுடன் வந்தவர்களின் அனுபவத்தை விளக்கும் வகையில் இக்கண்காட்சி அமைந்துள் ளது. விசா பெறும் முயற்சியில் தங்களின் அனுபவத்தை பலரும் எழுத்துப்பூர்வமாக பகிர்ந்து கொண்டுள்ளனர்.