உலகம்

அமெரிக்கா மீண்டது: அதிபர் ஜோ பைடன் நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

அமெரிக்கா அதன் ராஜதந்திர நடவடிக்கைகளுடன் மீண்டுவிட்டதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அதிபர் ஜோ பைடன் கூறும்போது, “நாங்கள் எங்கள் நேச நாடுகளுடனான கூட்டணிகளை சரிசெய்து, உலகத்துடன் மீண்டும் இணைந்து செயல்படுவோம்.

இந்த மீட்சி நேற்றைய சவால்களை எதிர்கொள்ளவதற்காக மட்டுமல்ல. இன்றைய மற்றும் நாளைய சவால்களை எதிர்கொள்ளவும் சேர்த்தே நடக்கிறது.

உலகளாவிய உரிமைகளை நிலைநிறுத்துதல், சட்டத்தை மதித்தல் மற்றும் ஒவ்வொரு நபருக்கும் கண்ணியத்துடன் நடந்துகொள்வது என உலக நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

கடந்த சில நாட்களாக நான் அமெரிக்காவுக்கு நெருக்கமான நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்.

கனடா, மெக்சிகோ, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், தென் கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு உறவின் தரப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த வருடங்களில், ட்ரம்ப்பின் ஆட்சிக்காலத்தில் பிற நாடுகளுடன் ஏற்பட்ட விரிசலை சரிசெய்யவும் தனது அரசு முயற்சிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT