இந்தியாவில் நடந்த விவசாயிகளின் போரட்டத்திற்கு ஆதரவாக பாடகி ரிஹானாவும், சுற்றுச் சூழல் செயற்பாட்டாளரான கிரெட்டா தன்பெர்க்கும் சர்வதேச அளவில் குரல் கொடுத்து உள்ளனர்.
புதிய வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக் கோரி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இரு மாதங்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக நடைபெற்ற அனைத்து சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்தன.
குடியரசு தினத்தன்று, டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டபோது ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து டெல்லி திக்ரி, சிங்கு எல்லைகள், உத்தரப் பிரதேசம் மீரட் எக்ஸ்பிரஸ் சாலை, காஜியாபாத் எல்லையில் விவசாயிகள் போராடும் இடத்தில் ஏராளமான போலீஸார், துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி எல்லையில் பல்வேறு சாலைகளும் மூடப்பட்டப்பட்டன. இணைய தளங்களும் முடக்கப்பட்டன. இச்சம்பவம் இந்தியா முழுவதும் கடுமையான அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சர்வதேச அளவில் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது.
பாடகி ரிஹானாவும், சூழியல ஆர்வலரான கிரெட்டா தன்பெர்க்கும் விசாயிகளின் போரட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ரிஹானா தனது ட்விட்டர் பக்கத்தில், “ நாம் இதைப் பற்றி ஏன் பேசவில்லை?” என்று பதிவிட்டு , விவாசயிகள் போராட்டம் தொடர்பான செய்தியையும் பகிர்ந்துள்ளார்.
கிரெட்டா தனது ட்விட்டர் பக்கத்தில், “ இந்திய விவசாயிகளின் போராட்டதிற்கு ஒத்துழைப்பு தருவோம்” என்று பதிவிட்டுள்ளார்.
இவ்விருவரின் ட்விட்டர் பதிவுகளை தொடர்ந்து விவாசாயிகளின் போரட்டம் மீண்டும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி உள்ளது.