சப்பாத்தி செய்வது மட்டுமே என் வேலை என கூறப்பட்டது, சமையலறையை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப் பட்டேன் என்று இம்ரான் கானின் முன்னாள் மனைவி ரேஹம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரிக் இன்சாஃப் என்ற கட்சியை நடத்தி வருகிறார். இம்ரான் கான் பிரிட்டனைச் சேர்ந்த தனது முதல் மனைவியை கடந்த 2004-ல் விவாகரத்து செய்தார்.
பின்னர் கடந்த ஜனவரியில் ரேஹம் என்ற பிபிசி செய்தி யாளரை மணந்தார். ஏற்கெனவே திருமணமாகி மூன்று குழந்தை களுக்குத் தாயான ரேஹம் விவாகரத்தானவர். 2013-ம் ஆண்டே பிபிசியிலிருந்து விலகிய ரேஹம் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தார்.
இதன்பின்னரே இம்ரானை மணந்து கொண்டார். ஆனால், 10 மாதங்களிலேயே இருவரும் பிரிந்து, விவாகரத்து பெற்றனர். கடந்த அக்டோபர் 30-ம் தேதி இம்ரான், ரேஹம் இருவரும் விவாகரத்தை உறுதி செய்தனர்.
இதுதொடர்பாக ரேஹம் தி சண்டே டைம்ஸ் என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
திருமணத்துக்குப் பின் ஒரு மூத்த ஆலோசகர் எனக்கு அறிவுரை வழங்கினார். அதன்படி, நான் சமையலறையில்தான் இருக்க வேண்டும். அவர்களுக்கு சப்பாத்தி செய்து கொடுக்க வேண்டும். வேறெங்கும் நான் தென்படக்கூடாது என கூறினர்.
நானும் எனது இளைய மகளும், இம்ரான் கானின் பானி கலா மலைவீட்டுக்குச் சென்று தங்கினோம். அப்போது நான் முடக்கப்பட்டதாக உணர்ந்தேன். நான் பெஷாவரில் உள்ள தெருக் குழந்தைகளுக்கான தூதரான போது தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டன. நான் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. பாதுகாப்பற்று உணர்ந்தேன்.
முரண்பாடுகள் ஏற்படாமல் இருக்க தொலைக்காட்சி பணியைத் துறந்தேன், சில மாதங்கள் வேலையே செய்யவில்லை. ஆனா லும், ஒரு பத்திரிகை பேட்டியில், எனது முதல் திருமணம் தொடர்பான கேள்வியெழுப்பப்பட்டபோது பிரச்சினை எழுந்தது.
குடும்ப வன்முறைக்கு ஆளாக் கப்பட்டீர்களா என்ற கேள்விக்கு பொய் சொல்ல விரும்பவில்லை. ஆம். ஓர் அரசியல்வாதியின் மனைவியாக ராஜ தந்திரத்துடன் பதில் தெரிவித்தேன்.
ஆனால், ஊடகத்தால் பிரச்சினை எழுந்தபோது, இம்ரான் மவுனம் சாதித்தார். நான் என்னைத் தற்காத்துக் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டேன். எனது கடந்த காலம் பற்றி இம்ரானுக்குத் தெரியும் என்றபோதும் தாக்கு தல்கள் அதிகரித்தன.
பெஷாவரில் தெருக்குழந்தை களுக்காக தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். மேலும் இரு திரைப்படங்களை தயாரிக்கவி ருக்கிறேன். என்னைக் காதலிப்ப தாகக் கூறிய, தனியாக இருந்த ஒரு வரை நான் திருமணம் செய்து கொண்டேன். அவருக்கும் எனக் கும் வாழ்க்கை குறித்து ஒரே பார்வை, ஒரே லட்சியம் இருந்த தாக நினைத்தேன். ஆனால், நாங்கள் இருவரும் முற்றிலும் வெவ்வேறானவர்கள். இவ்வாறு ரேஹம் தெரிவித்துள்ளார்.