உலகம்

பாரீஸ் தாக்குதல் தீவிரவாதி அப்துல் ஹமீது சுட்டுக் கொலை

ஏபி

ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தும் அபாயம்: பிரான்ஸ் பிரதமர் எச்சரிக்கை

*

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்த தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட அப்துல் ஹமீது அபாவுத் (புதன்கிழமை) சுட்டுக் கொல்லப்பட்டார். இத்தகவலை அந்நாடு உறுதி செய்துள்ளது.

கடந்த 13-ம் தேதி இரவு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 129 பேர் உயிரிழந்தனர். 350-க்கும் மேற்பட் டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்தத் தாக்குதலை தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதி சலா அப்சலாம் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாரீஸ் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட அப்துல் ஹமீது அபாவுத் பதுங்கியிருந்த வீட்டை போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போது ஒரு பெண் தீவிரவாதி உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்தார். தீவிரவாதி அபாவுத் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர்தான் அபாவுத் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் அவசர நிலை பிரகடனம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

விடையில்லாத வினாக்கள்:

அப்துல் ஹமீது அபாவுத் கொல்லப்பட்டதை பிரான்ஸ் உறுதி செய்திருந்தாலும், பல்வேறு கேள்விகள் விடையில்லாமல் இருக்கின்றன. பிரான்ஸில் தாக்குதல் நடத்தியதுபோல் ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியா, இராக்குக்கு வெளியே வேறு எங்கும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனரா என்பதற்கு விடையில்லை. ஒருவேளை, அபாவுத் உயிருடன் சிக்கியிருந்தால் தீவிவராத சதித்திட்டம் குறித்த தகவல்கள் அம்பலமாகியிருக்கலாம். அதேபோல், அபாவுத்துடன் 2 தீவிரவாதிகள் பலியாகினர். அவர்கள் விவரம் ஏதும் இல்லை.

கொல்லப்பட்ட தீவிரவாதிகளுள் ஒருவரான பிலால் ஹட்பி பெல்ஜியத்தைச் சேர்ந்தவர். பெல்ஜியம் தலைநகர் புரஸ்ஸல்ஸில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். பிலால் ஹட்பி தொடர்பான தகவல்களைத் திரட்டும் வகையில் இச்சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதனிடையே பிரான்ஸ் அதிபர் மானுவேல் வால்ஸ் பாரீஸில் நேற்று பேசியதாவது:

பிரதமர் எச்சரிக்கை:

பிரான்ஸ் மீது ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது என்று அந்த நாட்டு பிரதமர் மானுவேல் வால்ஸ் எச்சரித்துள்ளார்.

பிரான்ஸ் மீது ரசாயன ஆயுதம் அல்லது உயிரி ஆயுத தாக்குதல் நடத்தப்படுவதற்கான அபாயம் உள்ளது. பாதுகாப்பு கருதி பணி முடிந்த போலீஸாரும் ஆயுதங் களை உடன் வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திடீர் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட் டால் அவர்கள் சுடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT