பயங்கரவாத தாக்குதல்களைத் தடுக்க, உலக நாடுகள் அனைத்தும் பெரிய அளவில் உளவுத் தகவல் களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என இந்திய வெளியுறவு இணையமைச்சர் வி.கே. சிங் வலியுறுத்தியுள்ளார்.
பிராந்திய பிரவேசி பாரதிய திவஸ் நிகழ்ச்சியில் வி.கே. சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பாரீஸ் தாக்குதலை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒவ்வொருவரும் ஒன்று கூடுவோம் என நம்புகிறோம்.
அனைத்து நாடுகளும் மிகப்பெரிய அளவில் புலனாய்வு, உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற தாக்குதல்கள் பிற பகுதிகளில் நடைபெறாமல் தடுக்க முடியும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற் பதாக இருந்தது. பாரீஸ் தாக்குதலை அடுத்து துபாயிலி ருந்து சுஷ்மா இந்தியா திரும்பி யதால் வி.கே. சிங் பங்கேற்றார்.