உலகம்

பசுமைக் கழிவுகளில் இருந்து நேரடியாக எத்தனால் தயாரிப்பு: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

செய்திப்பிரிவு

காய்கனி உள்ளிட்ட பசுமைக் கழிவுகளை நேரடியாக எத்தனால் எரிபொருளாக மாற்றும் நுண்ணு யிரியை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இப்போதைய நிலையில் பல அடுக்கு ஆய்வக நடைமுறை களுக்குப் பிறகே பசுமைக் கழிவுகளில் இருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது. இதற்கான உற்பத்திச் செலவு அதிகம். இதனால் சோளத்தில் இருந்து எத்தனால் தயாரிப்பதற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மிகக் குறைந்த செலவில் பசுமைக் கழிவுகளை நேரடியாக எத்தனால் ஆக மாற்றும் நுண்ணுயிரியை உருவாக் கியுள்ளனர்.

இதுகுறித்து விஞ்ஞானி ஜேனட் கூறியதாவது: இரண்டரை ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகு கால்டிசெல்லூலோசிரிப்டர் பெஸ்ஸி என்ற நுண்ணுயிரியை நாங்கள் உருவாக்கியுள்ளோம். பல்வேறு நுண்ணுயிரியின் மரபணுக்கள் மூலம் புதிய நுண்ணுயிரி உருவாக்கப் பட்டுள்ளது. இந்த நுண்ணுயிரி மூலம் பசுமைக் கழிவுகளில் இருந்து நேரடியாக எத்தனால் தயாரிக்க முடியும். இதற்கான செலவும் மிகக் குறைவு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT