உலகம்

மத நிந்தனை புகாரில் இளைஞருக்கு ஆயுள்: பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

பிடிஐ

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில், இஸ்லாம் மதத்தை யும் கடவுளையும் நிந்தனை செய்த தாக இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பிலால் என்பவர் மீது அவரது தந்தை வகீல் ஹுசைன் என்பவர் 2013-ம் ஆண்டு போலீஸில் கொடுத்த புகாரின் மீது தொடரப் பட்ட வழக்கில், இந்த உத்தரவை மாவட்ட கூடுதல் செஷனல்ஸ் நீதிமன்ற நீதிபதி சையது பைசுல் பிறப்பித்தார்.

முன்னதாக, பிலாலை போலீ ஸார் கைது செய்து வழக்கு பதிவு செய்திருந்தனர். வழக்கு விசா ரணையின்போது பிலால் குடும்பத் தினர் வரவழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் பிலால் செய்த மத நிந்தனை செயல்கள் பற்றி வாக்கு மூலம் அளித்தனர்.

பாகிஸ்தானில் மத நிந்தனை குற்றங்களுக்கு இடம் தரப்படு வதில்லை. 97 சதவீதம் பேர் முஸ்லிம்கள்தான். மத நிந்தனை சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று பேசியதற் காக பஞ்சாபின் அப்போதைய ஆளுநராக பதவி வகித்த சல்மான் தசீர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாபாஸ் பட்டி ஆகி யோர் 2011-ல் கொல்லப்பட்டனர்.

ஆனால் மத நிந்தனை சட்டத் தின் மூலம் தனிப்பட்ட விரோதங் களுக்கு பழி வாங்க இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

SCROLL FOR NEXT