கம்போடியாவில் அங்கீகரிக்கப்படாத மருத்துவர் எச்ஐவி தொற்றுடன் இருந்த ஊசிகளை தொடர்ந்து பயன்படுத்தியதால் நூற்றுக்கணக்கானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது.
இதனை செய்த அந்த மருத்துவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்போடியா நாட்டில் எம் செரின் என்பவர் மருத்துவராக பணியாற்றி வந்தார். அவர் பயன்படுத்திய கிருமிகள் படிந்த ஊசிகளால் நூற்றுக்கணக்கானோருக்கு பேருக்கு எச்ஐவி நோய் ஏற்பட்டது பரிசோதனையில் உறுதியாகி உள்ளது.
இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மருத்துவராக அங்கீகரிக்கப்படாத நபர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
கம்போடியாவில், ரோகா என்ற கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு முதன் முதலாக எச்ஐவி தொற்று ஏற்பட்டது கடந்த நவம்பர் மாதம் கண்டறியப்பட்டது. இதனை அடுத்து சில அதே பகுதியில் 800 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 106 பேருக்கு எச்ஐவி தொற்று இருப்பது தெரிந்தது.
எம் செரின் ஊசி உள்ளிட்ட உபகரணங்களை நோயாளிகளிடம் மீண்டும் மீண்டும் உபயோகித்துள்ளது தெரியவந்துள்ளது. விசாரணையில் தான் நோயை பரப்பும் நோக்கத்தோடு ஊசியை மறுசுழற்ச்சி செய்யவில்லை என்றும் போலி மருத்துவராக செயல்பட்டது உண்மை தான் என்றும் எம் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனால், அந்த கிராமத்தை சேர்ந்த 200 பேருக்கு எச்ஐவி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மருத்துவரும் இதனை ஒப்புக்கொண்டுள்ள இவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமாக இருப்பதாக விசாரணையில் தெரியவந்தாலும், உள்ளூர் செய்தித்தாள்கள் பாதிப்பு எண்ணிக்கையை 300 ஆக குறிப்பிடுகின்றன.