உலகம்

அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா பலி

செய்திப்பிரிவு

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 4,051 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் கூறும்போது, “கடந்த மூன்று நாட்களாகவே அமெரிக்காவில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 4,051 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 3,74,124 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கபட்டுள்ளது.

கலிபோர்னியா, புளோரிடாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா தடுப்பு மருந்துகளை மக்களிடம் கொண்டு செல்லும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் உள்ள பல்வேறு கல்லறைகளில் இடமில்லாமல் நாட்கணக்கில் கரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் காத்திருக்கும் சோகமான நிலை ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT