‘‘ஆஸ்திரேலியாவை பிடிக்கா விட்டால், நாட்டை விட்டு வெளியேறி விடுங்கள்’’ என்று பிரதமர் மால்கம் டர்ன்புல் ஆவேசமாக கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கர்டிஸ் செங் என்ற 58 வயது போலீஸ்காரர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது 15 வயது பர்ஹாத் ஜபார் என்ற சிறுவன், துப்பாக்கியால் சுட்டதில் கர்டிஸ் உயிரிழந்தார். பின்னர் துப்பாக்கிச் சண்டையில் பர்ஹாத் கொல்லப்பட்டான். இந்த சம்பவம் நடந்த ஒரு வாரத்தில், தீவிரவாதிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் ஆவேசமாக கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:
ஆஸ்திரேலியாவின் உள் ளார்ந்த மதிப்புகள் பிடிக்கா விட்டால், நாட்டை விட்டு வெளி யேறுங்கள். இங்குதான் வாழ வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆஸ்திரேலியாவின் நெறி முறைகளை விரும்பாவிட்டால், வெளியில் நிறைய இடம் இருக்கிறது. சென்றுவிடுங்கள். தீவிரவாத பாதையில் செல்ல வேண்டாம் என்று ஆஸ்திரேலிய மக்களை கேட்டுக் கொள்கிறேன்.
தீவிரவாதத்தால் போலீஸ்கார் கர்டிஸ் பலியாகி உள்ளார். அந்த 15 வயது சிறுவனை தீவிரவாத பாதைக்கு தூண்டி விட்டுள்ளனர். அரசியல், மத ரீதியாக தீவிரவாதிகள் செயல்படுகின்றனர். அந்த தீவிரவாதத்தை ஒடுக்க ஆஸ்திரேலியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அதேபோல் ஒருவரை ஒருவர் மதித்து நடக்கும் கலாச்சாரத்தை நாடு முழுவதும் பரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிட்னியில் முஸ்லிம் தலைவர்களை நேற்றுமுன்தினம் நேரில் சந்தித்து பிரதமர் மால்கம் பேசினார். அப்போது, தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதற்கிடையில், பராமட்டா மசூதி தலைவர் நீல் எல் கடோமி நீல், பிரார்த்தனைக்கு வந்திருந் தவர்கள் மத்தியில் பேசும்போது, ‘‘உங்களுக்கு ஆஸ்திரேலியா பிடிக்கவில்லை என்றால், இங்கி ருந்து சென்று விடுங்கள். இங்கு வந்த பிறகு நீங்கள் ஆஸ்திரேலி யர்கள். அந்த முன்னுரிமையை தவறாக பயன்படுத்தாதீர்கள். தீவிரவாதத்தை நாங்கள் வெறுக் கிறோம். அதனால், பிடிக்காத வர்கள் வெளியேறுங்கள்’’ என்று வேண்டுகோள் விடுத்தார்.