உலகம்

நைகரில் தீவிரவாத தாக்குதல்: 100 பேர் பலி

செய்திப்பிரிவு

ஆப்பிரிக்க நாடான நைகரில் இரு கிராமங்களில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 100 பேர் பலியாகினர்.

நைகரில் உள்ள டொம்பாங்கோ, ஸாரூம்தரே என்ற இரு கிராமங்களில் தீவிரவாதிகள் நேற்று தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பொதுமக்கள் 100 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து பிரதமர் பிரிஜி ரபினி, அந்த இரு கிராமங்களுக்கும் பயணம் செய்தார்.

இதுகுறித்து நைகர் பிரதமர் பிரிஜி ராபினி கூறும்போது, “நான் இந்தச் சம்பவத்திற்காக வருத்தத்தைப் பதிவு செய்ய வந்தேன். ஒட்டுமொத்த தேசமும் உங்களுடன் துணை நிற்கும்” என்றார்.

நைகர் நாட்டில் கடந்த சில வருடங்களாகவே பயங்கரவாதத் தாக்குதல் அதிகரித்து வருகிறது. நைஜிரியாவை மையமாகக் கொண்டு செயல்படும் போகோ ஹராம் தீவிரவாதிகள் நைகரிலும் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையது.

போகோ ஹராம்

2002-ல் சாதாரணமாகத் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், வடகிழக்கு நைஜீரியாவில் கடந்த பத்தாண்டுகளாக தீவிரவாதச் செயலில் ஈடுபடத் தொடங்கியது.

போகோ ஹராம் தீவிரவாதிகள் இதுவரை சுமார் 27,000 பேரைக் கொன்றுள்ளனர். இதனால் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

SCROLL FOR NEXT