உலகம்

பிரேசிலில் கரோனாவுக்கு மொத்தம் 1,95, 441 பேர் பலி

செய்திப்பிரிவு

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 462 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “ பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 462 பேர் பலியாகினர். மேலும் 24,605 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் இதுவரை கரோனாவுக்கு 1,95, 441 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 77 லட்சம் பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்து கரோனா பலி எண்ணிக்கையில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

பிரேசிலில் பிப்ரவரி மாதம் முதல் கரோனா தொற்றுப் பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.

தென் அமெரிக்க நாடுகளில் பிரேசிலும், அர்ஜென்டினாவும் கரோனா வைரஸ் பரவலால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன என்றும், தென் அமெரிக்காவின் கரோனா மையமாக பிரேசில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு முன்னரே தெரிவித்திருந்தது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 8 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT