சிரியாவில் ஐஎஸ் இல்லாத பகுதிகளில் ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. ஐஎஸ் அமைப்பு மீது ரஷ்யா வான்வெளித் தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில் அமெரிக்கா இவ்வாறு தெரிவித்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆஷ்டன் கார்டர் இது தொடர்பாகக் கூறியதாவது:
ஐஎஸ் படைகள் இல்லாத பகுதியில் ரஷ்யர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். இந்த ஒட்டு மொத்த அணுகுமுறையில் இது முக்கியமான பிரச்சினை. ஒருபுறம் ஐஎஸ் அமைப்புக்கு எதிராகப் போரிடுவதாகக் கூறும் ரஷ்யா, சிரிய அதிபர் பசார் அல் அசாத் மற்றும் அவரது ஆட்சிக்கு ஆதரவளிக்கிறது.
இணையான அரசியல் மாற்றம் இல்லாம் ஐஎஸ்ஸுக்கு எதிராகப் போரிடுவது என்பது சிரியாவில் உள்நாட்டுப் போரை அதிகரிக்கச் செய்யும். ஸ்திரத்தன்மையற்ற நிலையும், தீவிரவாதமும் அதி கரிக்கும்.
ரஷ்யாவின் இந்த அணுகுமுறை எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதற்குச் சமம். சிரியாவில் ஐஎஸ் மற்றும் பயங்கரவாதத்தை அழிப்பது என்பது, இணையான அரசியல் மாற்றத்தால் மட்டுமே இயலும்.
இந்த இரு கோணங்களை யும் ஒரேசமயத்தில் மேற் கொள்வதன் முக்கியத்துவம் குறித்து நாங்கள் வலியுறுத்து வோம். இதில் ரஷ்யா எங்களுடன் இணைந்து செயலாற்றும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஐஎஸ்ஸுக்கு எதிராகப் போரிடுவது மற்றும் ஆசாத்துக்கு ஆதரவளிப்பது என்ற இரண்டையும் நாங்கள் குழப்பிக் கொள்ள மாட்டோம். ரஷ்யா தாக்குதல் நடத்தும் இடங்களில் ஐஎஸ் மற்றும் அல் காய்தா செயல்பாடுகள் இல்லை.
இதுபோன்ற தாக்குதல்கள் ஐஎஸ் மீதான தாக்குதல் மற்றும் ஆசாத்தின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளைப் பாதுகாப்பது என்ற ரஷ்யாவின் குறிக்கோளை இந்த வகையான தாக்குதல் கள் கேள்விக்கு உட்படுத்து கின்றன என அமெரிக்க உயரதிகாரி ஒருவர் தெரிவித் துள்ளார்.