உலகம்

புத்தாண்டு தினத்தில் நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதிய கிம்

செய்திப்பிரிவு

புத்தாண்டு தினத்தை ஒட்டி நாட்டு மக்களுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கடிதம் ஒன்றை எழுதிவுள்ளார்.

இதுகுறித்து வடகொரிய அரசு ஊடகம் தரப்பில், "அதிபர் நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தில் கடினமான காலத்தில் அவரை நம்பும் வடகொரிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புத்தாண்டில் மக்களின் விருப்பங்கள் நிறைவேற சிறப்பாக உழைப்பேன்" என்றும் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கரோனாவில் பல்வேறு நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகும்போது வடகொரியாவில் மட்டும் கரோனா தொற்று குறித்த எந்தத் தகவலும் வெளியிடப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் முன்னர் அதிபர் கிம், தங்கள் நாட்டில் ஒருவருக்குக் கூட கரோனா தொற்று இல்லை என்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார். மேலும் தனது ஆட்சியில் குறைகள் இருந்தால் தன்னை மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

வடகொரியாவுக்கு சீனா தனது கரோனா தடுப்பு மருந்துகளை வழங்கியதாக சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகியது. ஆனால் குறித்து வடகொரியா தரப்பில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 8 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

ஆனால், கரோனா பொதுமுடக்கத்தால் பல நாடுகள் பொருளாதாரப் பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன.

பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் மீண்டும் பல நாடுகளில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT