உலகம்

பாகிஸ்தானில் கரோனா பலி 10,000-ஐக் கடந்தது

செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் கரோனா பலி எண்ணிக்கை 10,000-ஐக் கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதார மையம் தரப்பில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 55க்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கரோனா பலி எண்ணிக்கை 10,047 ஆக அதிகரித்துள்ளது. பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் அதிக அளவிலான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், பொதுக் கூட்டங்கள், பேரணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல நகரங்களில் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் கரோனா இரண்டாம் கட்ட அலை தொடங்க உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், இரண்டாவது ஊரடங்கை அமல்படுத்த முடியாது. எனினும் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க அனைத்துக் கட்டுப்பாடுகளையும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானில் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT