இந்தியாவுடன் மேற்கொண்டது போல் அணுசக்தி ஒப்பந்தம் தொடர் பாக பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்தவில்லை. இது தொடர்பாக ஊடகங்களில் வெளி யான செய்திகள் அனைத்தும் தவறானவை என்று அமெரிக்கா திட்டவட்டமாக கூறியுள்ளது.
பல்வேறு சிக்கல்களுக்கு இடை யில், கடந்த 2005-ம் ஆண்டு இந்தியா - அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள் ளப்பட்டது. அதன்படி, இந்தியா வில் அணுசக்தியை மக்கள் நலனுக் காக பயன்படுத்த அமெரிக்கா எல்லா உதவிகளையும் செய்ய முடிவானது. குறிப்பாக மின்சாரம் தயாரிப்பது உட்பட பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு அணுசக் தியை பயன்படுத்த அமெரிக்கா உதவும்.
இந்நிலையில், அமெரிக்கா வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் அதிபர் ஒபா மாவும், சிவில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், பாகிஸ்தானுடன் அப்படி ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்று அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. இதை அமெரிக்க அதிகாரிகள் நேற்று திட்டவட்டமாக மறுத்தனர்.
ஒபாமா - நவாஸ் சந்திப்புக்குப் பின்னர், இதுகுறித்து செய்தி யாளர்கள் கேட்டதற்கு பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சிவில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பிரதமர் நவாஸுடன் அதிபர் ஒபாமா பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை. அமெரிக்க ஊடகங்களில் வந்துள்ள செய்திகள் முற்றிலும் தவறா னவை. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால், பாகிஸ் தானுடன் ‘123 ஒப்பந்தம்’ தொடர் பாக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. (123 என்பது அமெரிக்க அணுசக்தி சட்டம் - 1954ன் 123-வது பிரிவு. மற்ற நாடுகளுடன் அணுசக்தி தொடர் பாக ஒத்துழைப்பு வழங்க இந்த 123 சட்டப் பிரிவு அனுமதிக்கிறது.)
ஆனால், பாகிஸ்தானில் உள்ள அணுசக்தி பாதுகாப்பு குறித்து ஒபாமாவும் நவாஸும் ஆலோ சனை நடத்தினர். அப்போது, அணு ஆயுதங்களின் பாதுகாப்பு குறித்து அமெரிக்காவின் கவலையை நவாஸிடம் ஒபாமா கூறினார். அணுஆயுதங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தியது.இவ்வாறு அமெரிக்க அதிகாரி கூறினார்.