உலகம்

ரூ.21 லட்சம் பணத்துடன் சீனரின் சடலம் எரிப்பு: மகன்கள் கைவிட்டதால் கடைசி ஆசை

பிடிஐ

சீனாவில், ஒரு மனிதரின் கடைசி ஆசைப்படி அவர் சேமித்து வைத் திருந்த சுமார் ரூ.21 லட்சம் அவரின் உடலுடன் சேர்த்து தகனம் செய்யப் பட்டது. அவரின் இரு மகன்கள் அவரைப் புறக்கணித்ததால், பணத்தையும் தன்னுடன் சேர்த்து எரிக்க வேண்டும் என அவர் தனது கடைசி ஆசையை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.

கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த விவசாயி தாவோ. இவர் தனது சேமிப்பான ரூ.21 லட்சத்தை தனது மகன் களுக்கு கொடுக்க விரும்ப வில்லை. அவரின் இறுதிக்காலத் தில் இரு மகன்களும் அவரைக் கவனித்துக் கொள்ளாதது அவ ருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தன் விவசாய நிலத்ததை இரு மகன்களுக்கும் பகிர்ந்து கொடுத்துவிட்டு கிராமத்திலிருந்து வெளியேறிவிட்டார். வாடகைக்கு ஒரு வீட்டில் வசித்தபடி, குப்பை களைப் பொறுக்கி வாழ்ந்து வந்தார்.

முதுமையால் அவரால் இய லாதபோது மகன்களின் உத வியை நாடியுள்ளார். இருவரில் ஒருவருடன் தங்க விரும்பியிருக் கிறார். ஆனால், இருவரும் வெவ்வேறு காரணங்களைக் கூறி மறுத்துள்ளனர்.

இதையடுத்து, அவர் தன் சேமிப் பான ரூ.21 லட்சத்தை தன்னுடனே வைத்து தகனம் செய்யும்படி இறுதி ஆசையை வெளியிட, அவரது ஆசை பூர்த்தி செய்யப்பட்டது.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே இது நிகழ்ந்து விட்டாலும், உள்ளூர் மயானத்தில் பணிபுரியும் ஒருவர் தெரிவித்ததன் மூலம் இத் தகவல் அரசின் செய்தி தொலைக் காட்சியான சிசிடிவியில் தற் போதுதான் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT