அவசர கால அழைப்புகள், வைபை, போக்குவரத்து நெரி சலை எச்சரிக்கும் கருவி, கண் காணிப்பு கேமரா என பல்வேறு வசதிகளைக் கொண்ட தெரு விளக்கு கம்பங்கள் சீனாவின் ஷாங்காயில் நிறுவப்பட்டுள்ளன.
எட்டு மீட்டர் உயரமுள்ள 15 தெரு விளக்கு கம்பங்கள் ஜிங் மாவட்டத்தில் உள்ள டாகு சாலையில் நிறுவப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தெருவிளக்கு கம்பத்திலும், அவசர காலபட்டன் உள்ளது. இதனை அழுத்தினால், காவல் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பொதுச்சேவை அமைப்புகளுக்கு உடனடி அழைப்பு செல்லும்.
இந்த கம்பத்தில் உள்ள கண் காணிப்பு கேமரா, அப்பகுதியில் நிகழும் அனைத்தையும் பதிவு செய்து கொள்ளும். தீவிரமான போக்குவரத்து நெரிசல் அல்லது மக்களுக்கு அபாயத்தை விளை விக்கக் கூடிய நிகழ்வுகள் நடை பெற்றால் இதில் உள்ள ஒலி பெருக்கி தானாக செயல்பட்டு, அங்கிருந்து வெளியேறுவதற் கான அவசரகால தகவல்கள், அறிவுறுத்தல்களை வழங்கும்.
சீன எலக்ட்ரானிக் டெக்னாலஜி குரூப் கார்ப்பரேஷன் 50-வது ரிசர்ச் இன்ஸ்டிடியூட் இதனை வடி வமைத்துள்ளது. இதன் துணை இயக்குநர் லின் டாவோ கூறும் போது, “மக்களுக்கு சேவை, பாது காப்பு அளிப்பது, எரிசக்தி சேமிப்பு உள்ளிட்டவற்றை மனதில் கொண்டு இந்த கம்பங்கள் வடிவமைக்கப்பட்டன” எனத் தெரிவித்துள்ளார்.